ETV Bharat / state

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை!

author img

By

Published : Oct 22, 2019, 10:59 AM IST

திருச்சி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 75 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த உஸ்மான்(75) என்பவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.

2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம்போல் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தபோது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உஸ்மானை கைது செய்தனர்.

பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டு சிறை

இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் உஸ்மானுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிறுமிக்கு காதுக்கு பதிலாகத் தொண்டையில் ஆப்பரேஷன்: மருத்துவர்கள் அலட்சியம்!

Intro:திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.Body:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு சிறை

திருச்சி: திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த 7 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த உஸ்மான் (75) என்பவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார்.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம்போல் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தபோது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உஸ்மானை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி வனிதா தீர்ப்பளித்தார். இதில் உஸ்மானுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.Conclusion:உஸ்மானுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.