ETV Bharat / state

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

author img

By

Published : Apr 27, 2019, 11:49 AM IST

திருச்சி: சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி மகிளா நீதிமன்றம்

திருச்சி பாலக்கரை கூலிபஜார் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் என்கிற முகமது இலியாஸ்(43). இவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கடையின் அருகே உள்ள பங்காளி தெருவைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம், மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அப்பாசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Intro:சிறுமி பாலியல் வழக்கில் சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Body:திருச்சி:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சைக்கிள் கடை உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி பாலக்கரை கூலி பஜார் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் என்கிற முகமது இலியாஸ். (43). அந்தப் பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கடையின் அருகே உள்ள பங்காளி தெருவைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம், மிக்சர் ஆகியவை வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி மகிழேந்தி தீர்ப்பளித்தார். இதில் அப்பாசுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Conclusion:7 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.