ETV Bharat / state

உபி.யில் தாக்கப்பட்ட ராகுல்: நீதி கேட்டு மகளிர் காங். அறப்போராட்டம்!

author img

By

Published : Oct 6, 2020, 8:17 PM IST

மயிலாடுதுறை: உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறை மகளிர் காங்கிரஸ் சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் அறவழி போராட்டம்
காங்கிரஸ் அறவழி போராட்டம்

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பட்டியலின சிறுமியை பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிப்படையாகவே தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பில்லாத நிலையைச் சுட்டிக்காட்டி, இந்தச் சம்பவத்திற்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் மகளிர் காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக அறப்போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் மரகதவள்ளி தலைமை ஏற்றார். இதில் முன்னாள் நகரத் தலைவர் செல்வம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.