ETV Bharat / state

முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்பனை - இருவர் கைது!

author img

By

Published : Aug 2, 2020, 9:19 PM IST

கன்னியாகுமரி : முழு ஊரடங்கை பயன்படுத்தி சுசீந்திரம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்பனை - இருவர் கைது!
முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்பனை - இருவர் கைது!

தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் இன்று (ஆகஸ்ட் 2) மூடப்பட்டுள்ளன.

இதை பயன்படுத்தி குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சுசீந்திரம் அருகே தெங்கம்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருவதாக குமரி மாவட்ட தனிப்படை பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (41), ரவி(35) ஆகிய இருவரையும் கைது செய்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதற்காக அவர்கள் வைத்திருந்த 466 மது பாட்டில்களையும் தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ், பிரபல ரவுடி தங்கபாண்டியன் என்பவரது மகன் என்பதும் அவர் மீது ஏற்கனவே நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.