ETV Bharat / state

வன உயிரினங்களைக் காப்பதில் அலட்சியம் காட்டும் வனத் துறை...! - மக்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Jan 28, 2020, 9:40 AM IST

திருப்பூர்: குடியிருப்புப் பகுதிகளில் வழிதவறிவரும் வனவிலங்குகள் குறித்து திருப்பூர் மாவட்ட வனத் துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் அலட்சியம் காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

tirupur forest department is that failing to protect the wildlife
குடியிருப்பு பகுதிக்குள் வழித்தவறி நுழைந்த அரியவகை முள்எலி

திருப்பூரை அடுத்துள்ள ராக்கியாபாளையம் அமர்ஜோதி கார்டன் பகுதியைச் சேர்ந்த போஸ் என்பவர் வீட்டின் முன் வித்தியாசமான பொருள் ஒன்றைக் கண்ட அவரது நாய் குரைத்தவாறு இருந்ததைத் கண்டு, அதனருகே சென்று பார்த்தபோது அவை காட்டினுள் இருக்கக்கூடிய அரியவகை முள் எலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து முள் எலியை பத்திரமாக மீட்டவர் இது குறித்து வனத் துறை அலுவலருக்கு தகவல் கொடுத்த நிலையில், 5 மணி நேரம் கழித்தே வனத் துறையைச் சேர்ந்த சிவமணி என்ற வன அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிடிபட்ட முள் எலிக்கு இரண்டரை வயது இருக்கக்கூடும் என்று அறிய முடிகிறதென வனத் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பிடிபட்ட முள் எலி பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு கைத்தமலையில் உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

திருப்பூர் வனத் துறை வன உயிரினங்களைக் காக்க தவறுகிறதா?

இதனிடையே திருப்பூரை அடுத்த கோதபாளையம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வழிதவறி ஊருக்குள் வந்த புள்ளிமானை அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் கடித்ததில் மான் படுகாயம் அடைந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்தும் அன்று மாலைவரை வனத் துறை அலுவலர்கள் யாரும் வராத நிலையில் மான் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த அம்மானை அப்பகுதியிலேயே புதைத்துள்ளனர்.

வனவிலங்குகள் நீர்நிலைகளைத் தேடி தாகத்தில் வழிதவறி மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வரும்போது, அதனை மீட்கும் பொதுமக்கள் திருப்பூரில் உள்ள வனத் துறை அலுவலர்களுக்கும், வன அலுவலருக்கும் பலமுறை தகவல் கொடுத்தும் அவர்கள் பல மணி நேரம் தாமதமாக வருவதும் சில நேரங்களில் வராமலேயே போவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருப்பூரில் விலங்கியல் பூங்கா இல்லாததால் இப்பகுதியில் பொதுப்பணித் துறையினருக்குச் சொந்தமான சுமார் 90 ஏக்கர் அடர்ந்த காட்டுப்பகுதியையும், 100 ஏக்கர் பரப்பளவுள்ள புதுப்பாளையம் குளத்தையும் சீரமைத்து விலங்குகள், பறவைகள் வந்து செல்லும் வகையில் விலங்கியல் பூங்கா அமைத்தால் மான்கள், மயில்கள், முள் எலிகள் போன்ற அரியவகை இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்படும்.

மேலும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும்போது அரசுக்கு வருவாயும் கிடைக்கும். ஆகவே அழிந்துவரும் மான்களைப் பாதுகாப்பதோடு, விவசாயிகளும் பாதிக்காத வகையில், மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறிவருவது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இதையும் படிங்க : சிறுமி வயிற்றில் முடி, ஷாம்பு பாக்கெட்! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

Intro:திருப்பூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்ட முள்எலி வனப்பகுதிக்குள் விடப்பட்டது -- குடியிருப்பு பகுதிகளில் மீட்கும் வனவிலங்குகள் குறித்து திருப்பூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!Body:
திருப்பூர் ராக்கியாபாளையம் அமர்ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் போஸ், எனபவர் வீட்டின் முன் வித்தியாசமான பொருள் ஒன்றைக் கண்ட அவரது நாய் குறைத்தவாறு இருந்ததை கண்டவர், அதனருகே சென்று பார்த்தபோது அவை காட்டினுள் வாழக்கூடிய அரியவகை முள்எலி என்பது தெரியவந்தது இதையடுத்து முள் எலியை பத்திரமாக மீட்டவர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்த நிலையில், 5 மணி நேரம் கழித்தே வனத்துறையை சேர்ந்த சிவமணி என்ற வன அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து முள் எலியை மீட்டவர். பிடிபட்ட முள்எலிக்கு இரண்டரை வயது இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர் இதையடுத்து பிடிபட்ட முள் எலியை பாதுகாப்பாக எடுத்து சென்ற கைத்தமலை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டது இதனிடையே திருப்பூரை அடுத்த கோதபாளையம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்வழிதவறி ஊருக்குள் வந்த புள்ளி மானை அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் கடித்ததில் மான் படுகாயம் அடைந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் அன்று மாலைவரை வனத்துறை அதிகாரிகள் யாரும் வராத நிலையில் மான் உயிரிழந்துள்ளது இதையடுத்து அப்பகுதியினர் அம்மானை அப்பகுதியிலேயே புதைத்துள்ளதும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வரும்போது அதனை மீட்கும் பொதுமக்கள் திருப்பூரில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கும், வன அலுவலருக்கும் , பலமுறை தகவல் கொடுத்தும் அவர்கள் பல மணி நேரம் தாமதமாக வருவதும் சிலநேரங்களில் வராமல் இருப்பதால் வனவிலங்குகள் உயிரிழந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.