ETV Bharat / state

நடிகர் விஜய், சிம்புவுக்கு நன்றி தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர்

author img

By

Published : Jan 4, 2021, 3:50 PM IST

100 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ள நிலையில், அந்தக் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்ற நடிகர் விஜய், சிம்புவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சக்தி சுப்பிரமணியன் நன்றி தெரிவித்துள்ளார்.

theatre association leader thank actor vijay and simbu
நடிகர் விஜய், சிம்புவுக்கு நன்றி தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர்

திருப்பூர்: கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இதனிடையே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து திரையரங்கில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று தமிழ்நாட்டில் 100 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

நடிகர் விஜய், சிம்புவுக்கு நன்றி தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர்

மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக எங்களது கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டுசென்ற நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். திரையரங்குகள் 100 விழுக்காடு இருக்கைகளுடன் செயல்படத் தொடங்கும்போது, ஓடிடிகளுக்குப் படங்கள் செல்வது குறைந்துவிடும்.

முதற்கட்டமாக பொங்கல் அன்று விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியிடப்படுகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ஓடிடிக்குச் செல்லும் படங்களின் எண்ணிக்கை நிச்சயமாக குறையும். திரையரங்கு உரிமையாளர்களின் நலன்கருதி ஓடிடிக்குப் படங்களை அளிக்காத அனைத்து நடிகர்களுக்கும் நன்றி" என்றார்.

இதையும் படிங்க: 'நடிகர் சூர்யா குடும்பத்து திரைப்படங்களை திரையிட விருப்பமில்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.