ETV Bharat / state

திருப்பூரில் டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை

author img

By

Published : Oct 19, 2020, 5:38 PM IST

திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்புப் பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

people petition
people petition

திருப்பூர் அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சிக்கு்ள்பட்ட ஆத்துமேட்டு பகுதியில் இரண்டு தலைமுறைகளாக 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த இடம் வேளாண் பகுதியாக உள்ள நிலையில் மதுக்கடை அமையும்பட்சத்தில் இப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால், சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பாக அமையும் என்பதால் விவசாயிகளும், பொது மக்களும் அப்பகுதியில் டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறி மனு அளித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.