ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

author img

By

Published : Jul 30, 2019, 1:51 PM IST

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆய்வு மட்டும் செய்யாமல் முழுமையாக தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் -பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தாம் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் அலுவலகம் கடந்த ஜூன் 28ஆம் தேதி பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கு உரிய நடவடிக்கை மேற்க்கொண்டு விளக்கமளிக்க உத்திரவிட்டதன் பேரில், ஹைட்ரோ கார்பன் திட்ட இயக்குநருக்கு காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் தமக்கு இன்று கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

மேலும் பேசிய அவர், மத்திய அரசை கேட்டுக்கொள்வதெல்லாம் ஆய்வு செய்து கொள்கையை கை விடுவதாக அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் உடனடியாக கொள்கையை கைவிட்டு நடைபெற்று கொண்டிருக்கின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடாிலேயே மத்திய அமைச்சர் அறிவிக்க வேண்டும் எனவும், இல்லையேல் காவிாி டெல்டா தொடர் போராட்டக்களமாக மாறும் எனவும் எச்சாிக்கை விடுத்தார்.

Intro:Body:ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஆய்வு மட்டும் செய்யாமல் முழுமையாக தடைசெய்ய கொள்கை பூர்வமாக நடவடிக்கை எடுத்து நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடாிலேயே மத்திய அமைச்சர் அறிவிக்க வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி .

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு சார்பில் கடந்த ஜூன் 26ம் தேதி டெல்லி பிரதமர் அலுவலகத்தில் நேரில் சென்று கடிதம் அளித்தனர். இதனை நடை பெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே அறிவித்திட வேண்டும் எனவும், மறுக்கும் பட்சத்தில் ஜீலை 26ல் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என பி.ஆர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு சந்தித்து தெரிவித்ததாவது,

தாம் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் அலுவலகம் கடந்த ஜூன் 28ம் தேதி பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கு உரிய நடவடிக்கை மேற்க்கொண்டு விளக்கமளிக்க உத்திரவிட்டதன் பெயரில்,
ஹைட்ரோகார்பன் திட்ட இயக்குனருக்கு காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து ஆய்வு மேற்க்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் தமக்கு இன்று கடிதம் எழுதியுள்ளது .

எனவே மத்திய அரசை கேட்டுகொள்வதெல்லாம் ஆய்வு செய்வதோடு கொள்கையை கை விடுவதாக அறிவிப்தோடு மட்டுமல்லாமல் உடனடியாக கொள்கை பூர்வமாக கைவிட்டு நடைபெற்றக்கொண்டிருக்கிற பாராளுமன்ற கூட்டத் தொடாிலேயே மத்திய அமைச்சர் அறிவிக்க வேண்டும் . இல்லையேல் காவிாி டெல்டா தொடர் போராட்டகளமாக மாறும் என்பதை எச்சாிப்பதாக தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.