ETV Bharat / state

பொய்யான வீடியோ மூலம் பரப்பப்பட்ட வதந்தி - எப்.ஐ.ஆர். மூலம் அம்பலமான உண்மை

author img

By

Published : Mar 7, 2023, 12:24 PM IST

திருப்பூரில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்பது, வீடியோவின் உண்மைத் தன்மையின்மை மற்றும், முதல் தகவல் அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

Etv Bharat
Etv Bharat

திருப்பூர்: திருப்பூரில் வசித்து வந்த பீகார் மாநில தொழிலாளியான பவன் யாதவ் கொல்லப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. பவன் யாதவின் குடும்பத்தினர் பவன் யாதவ் கொலை நிகழ்ந்ததற்கு ஆதாரம் என கூறி ஒரு வீடியோ ஒன்றையும் வழங்கினர்.

உயிரற்ற பவன் யாதவ் உடலைப் பார்த்த பீகார் மாநில மக்கள், சமூக வலைத்தள பக்கங்களில் பரவிய வீடியோவையும், ஒரு சில ஊடகங்கள் பரப்பிய வீடியோவையும் பார்த்து அச்சத்தின் உச்சத்திற்கு சென்றனர். இது தவிர ஹலி பண்டிகைக்காக தமிழ்நாட்டிலிருந்து பீகார் புறப்பட்டவர்களையும் வீடியோ எடுத்து தாக்குதலால் பயந்து ஓடுவதாக செய்தி பரப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை ஆதாரங்கள் அடிப்படையில் ஈடிவி பாரத் அணுகியுள்ளது. முதலில் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களுடன் தாக்குவதைப் போன்ற வீடியோவின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்பட்டது. இந்த வீடியோ கோயம்புத்தூரில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி நடந்த கொலை தொடர்புடையது. இது தொடர்பாக அன்றைய தினமே ஈடிவி பாரத்தின் தமிழ் இணையதளத்தில் பதிவிடப்பட்ட வீடியோ இணைப்பு கீழே உள்ளது.

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/cctv-footage-of-youth-being-hacked-to-death-at-coimbatore/tamil-nadu20230213182139538538075

இதே போன்று குறிப்பிட்ட நாட்களில் தமிழகத்தில் உயிரிழந்த பீகார் மாநிலத்தவர்களின் பின்னணி ஆராயப்பட்டது . இதனடிப்படையில் பவன் யாதவ் என்ற ஒரு நபர் திருப்பூர் சிட்டி லிமிட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை போலீசார் வழங்கியுள்ளனர். இதனடிப்படையில் உபேந்திர தாரி என்ற ஜார்க்கண்ட் இளைஞரின் மனைவிக்கும், பவன் யாதவுக்கும் திருமண பந்தத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகராறில் உபேந்திரதாரி , பவன் யாதவை வெட்டிக் கொன்றதாக எப் ஐ ஆர் கூறுகிறது. (Crime no 272/2023 IPC 302)

உபேந்திரதாரி தற்போது கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஜார்க்கண்ட்டிலிருந்து வந்து தமிழகத்தில் செட்டில் ஆனவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். உபேந்திரா மற்றும் அவரது மனைவிக்கு 3 குழந்தைகள் இருப்பதால், குழந்தைகளின் நலன் கருதி அவர்களின் தொடர்பு எண்களை வழங்க போலீசார் மறுத்துவிட்டனர். இருப்பினும் பவன் யாதவின் தம்பி மற்றும் உபேந்திராவின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள ஈடிவி பாரத் முயற்சித்து வருகிறது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் சிறைபிடிப்பு.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.