ETV Bharat / state

5 கி.மீட்டர் தூரம் மருத்துவமனைக்கு தோளில் சுமந்து செல்லும் அவலம் - பொதுமக்கள் கோரிக்கை

author img

By

Published : Jul 19, 2023, 1:41 PM IST

Updated : Jul 19, 2023, 2:07 PM IST

திருப்பூர் மாவட்டம் குருமலை வனப்பகுதியில் சாலை வசதி இல்லாமல் உடல் நலம் குன்றிய நபரை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளது.

road facilities
சாலை வசதி இல்லாமல் தோளில் சுமந்து செல்லும் மக்கள்

சாலை வசதி இல்லாமல் தோளில் சுமந்து செல்லும் மக்கள்

திருப்பூர்: உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் சுமார் 7 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில் குருமலை வன குடியிருப்பில் மட்டும் 101 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் குச்சி, கிழங்கு உள்பட பல்வேறு வனப் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் நிலப்பரப்பிற்கு வர ஐந்து கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கடந்த வாரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மக்களுக்கான சாலை வசதியை ஏற்படுத்தி தர உத்தரவிட்டார்.

இந்த நிலையில், குருமலை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (40) என்ற நபருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து தொட்டில் கட்டி அவரை சுமந்து கீழே அழைத்து வருகின்றனர். 5 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்பதால் மலை கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பலரும் மாற்றி மாற்றி அவரை தோளில் சுமந்து வருகின்றனர்.

மேலும், மிக கடுமையான கரடு முரடான மலைப் பகுதியில் உயிரை பணயம் வைத்து பயணிக்க வேண்டி இருக்கிறது என கூறும் அப்பகுதி மக்கள், மருத்துவமனையை கூட தங்களால் உடனடியாக அணுக முடியாத சூழல் உள்ளதால் விரைந்து சாலையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் முன் வைத்து உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “குருமலை வனத்தில் வன விலங்குகள் இருக்கின்றன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. ஒவ்வொரு முறையும் வனத்தை விட்டு வெளியே வந்து செல்வது மிகப்பெரிய காரியமாக இருக்கிறது. லைக்கிராமம் என்பதால் மருத்துவர்கள், செவிலியர்கள் வருவதற்கு அஞ்சுகிறார்கள். சாலை அமைத்து கொடுக்க கோரிக்கை விடுத்து இருக்கிறோம். இந்த காலத்திலும் சாலை வசதி இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. எனவே அரசு எங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும்" என்றனர்.

Last Updated : Jul 19, 2023, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.