ETV Bharat / state

காலி சிலிண்டர்கள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து!

author img

By

Published : Feb 28, 2021, 4:45 PM IST

கேரளாவில் இருந்து திருப்பூருக்கு காலி சிலிண்டர்களை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

empty cylinders truck accident in tiruppur
காலி சிலிண்டர்கள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருப்பூர்: கேரள மாநிலம் காயங்குளம் பகுதியிலிருந்து, பல்லடம் அனுப்பட்டியில் உள்ள கண்ணப்பன் ஸ்டில்ஸ் என்ற தொழிற்சாலைக்கு காலி சிலிண்டர்களை சவிக் என்பவர் ஏற்றி வந்துள்ளர். நேற்று இரவு பல்லடம் - கொச்சின் நெடுஞ்சாலை கரடிவாவி பகுதியில் வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், லேசான காயங்களுடன் லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஐபேக் இளைஞர் படையுடன் தேர்தல் களம் காணும் திமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.