ETV Bharat / state

திருப்பத்தூரில் வாரச்சந்தை ஏலம்விடுவதில் பிரச்சினை!

author img

By

Published : Nov 12, 2020, 5:38 PM IST

திருப்பத்தூர்: கரோனா காலத்தில் வாரச்சந்தை சரிவர நடக்காததால், நஷ்டம் அடைந்த ஒப்பந்ததாரர், மீண்டும் விடப்பட இருந்த ஏலக்கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, காவலர்களின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏலக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

திருப்பத்தூர்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட பிரசித்திப்பெற்ற பாரத கோயிலுக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் உள்ள பகுதியில் வாரச்சந்தை நடைபெறுகிறது.

வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளில் கந்திலி பகுதியில் பாரம்பரியமாக சந்தை செயல்பட்டுவருகின்றது. இந்த வாரச்சந்தைக்கு பல பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆடுகள், மாடுகள், கோழி மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வியாபாரம் செய்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த வாரச்சந்தையை ஊர் பொதுமக்கள் ஏலம்விட்டு கோயில் பணிக்குச் செலவழித்து வந்துள்ளனர். இது நாளடைவில் அறங்காவல் துறையில் சேர்க்கப்பட்டு அறங்காவல் துணையோடு ஏலம்விடுவது வழக்கமாக இருக்கிறது.

இந்நிலையில் கடந்த வருடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். கரோனா தொற்று காரணமாக 14 வாரங்களாகச் சந்தை செயல்படவில்லை.

இதற்குள் அறநிலைத்துறை ஒரு வருட காலம் முடிந்ததின் காரணமாக மீண்டும் ஏலம் விட முற்படும்போது கடந்த வருடம் ஏலம் எடுத்த சிவா மற்றும் பொதுமக்கள் ஏலத்தை தடுத்து நிறுத்தி ஏற்கனவே எடுத்த நாள்களை நீட்டிக்க அனுமதிகொடுக்க வேண்டும் அல்லது தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைத் திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறி இஓ பரந்தாமன் கண்ணனிடம் முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து கந்திலி காவல் துறை சம்பவயிடத்திற்கு விரைந்துவந்து சமரசம் செய்து ஏலம்விடுவதை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டனர். ஏலம்விடாமல் நிறுத்திவைக்கப்பட்டதால் பொதுமக்களும் கலைந்துசென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.