ETV Bharat / state

இன்று முதல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குங்கள் என வாணியம்பாடியில் வி.கே.சிங் பேச்சு

author img

By

Published : Jul 12, 2022, 9:17 PM IST

இன்று முதல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குங்கள், மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனையை சொல்லி வாக்குகளை சேகரியுங்கள், என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குங்கள் வாணியம்பாடியில் வி.கே.சிங் பேச்சு
இன்று முதல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குங்கள் வாணியம்பாடியில் வி.கே.சிங் பேச்சு

திருப்பத்தூர்: வாணியம்பாடி பெருமாள் பேட்டை அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் ராணுவ ஜென்ரலும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டார்.

அப்போது பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியை இல்லாத நாடாக இந்தியா இருக்கும். கடந்த 8 ஆண்டுகளாக நமது மத்திய அரசின் சாதனைகளை சொல்லி இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை நீங்கள் தொடங்க வேண்டும். கடந்த ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 17 கிலோமீட்டர் மட்டுமே சாலை போடும் பணியை மேற்கொண்டு வந்தனர்,

ஆனால் தற்போது 37 கிலோமீட்டர் வரை நாள் ஒன்றுக்கு சாலை போடும் பணியை நமது அரசு செயல்படுத்தி வருகிறது, என தெரிவித்தார். இதில் பாஜக மாநில துணை செயலாளர் கார்த்தியாயினி, வெங்கடேசன், மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு விவகாரம்; சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.