ETV Bharat / state

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர்!

author img

By

Published : Jul 17, 2020, 11:32 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஆசைக்கினங்க மறுத்த மனைவின் தலையில், அம்மி கல்லை போட்டு கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The husband who stoned his wife to death!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்தோப்புலகுண்டா பகுதியை சேர்ந்த தம்பதியர் மணி ( 65)-ஆரஞ்சு ( 60). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது இரண்டு மகள்களும் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் மணி ஆடு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை ஆசைக்கு இணங்கும்படி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை குடிபோதையில் வந்தவர் மனைவியை ஆசைக்கு இணங்கஅழைத்ததாகவும், ஆனால் அதற்கு அவர் வர மறுத்தவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணி, தனது மனைவியென்றும் பாராமல் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

இதையடுத்து மனைவி இறந்ததை உறுதிப்படுத்திய பின், மணி திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.