ETV Bharat / state

அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்: வீட்டு வரி ரசீதை தர மறுக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம்!

author img

By

Published : Aug 7, 2023, 4:42 PM IST

வாணியம்பாடியில் தமிழக - ஆந்திர எல்லையோர பகுதியான நாராயணபுரம் கிராம மக்கள் ஆன்லைன் மூலம் வீட்டு வரி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த ரசீதை தர மறுக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வரி ரசீதை தர மறுக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம்
வீட்டு வரி ரசீதை தர மறுக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம்

வீட்டு வரி ரசீதை தர மறுக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் வசிக்கும் தமிழக மக்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்க மறுக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது நாராயணபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு குடும்ப அட்டை மற்றும் மின் இணைப்பு ஆகியவை தமிழக அரசின் கீழ் உள்ள நிலையில், கடந்த ஆறு கால மாதமாக நாராயணபுரம் கிராம மக்கள் வீட்டு வரி ரசீதை ஆன்லைனில் கட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக அப்பகுதி மக்களுக்கு உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான படிவம் அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற வீட்டு வரி ரசீது முக்கியமாக உள்ளதால், ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரிடம் ஆன்லைன் மூலம் வீட்டு வரி செலுத்தியதற்கான ரசீதை கிராம மக்கள் கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரயிலில் தவறவிட்ட 6 வயது சிறுவனை மீட்டு தாயிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு!

ரசீதினைத் தர ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி கிராம மக்கள் இதனை கண்டித்து, அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வட்டாச்சியர் சாந்தி மற்றும் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீம் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்தனர்.

இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இப்பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னரும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிடாமல், அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு மறுப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் நாராயணபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து வாணியம்பாடி வட்டாட்சியர் சாந்தியிடம் கேட்டபோது, "தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் வீடுகள் உள்ளதால் இரு மாநில அதிகாரிகள் தற்போது ஆலோசனை செய்து வருகிறோம். ஆய்வு செய்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ரசீதுகளை உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி உழக்குடியிலும் அகழாய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.