ETV Bharat / state

வண்டி வாங்கியவர்களுக்கு இது தான் நிலைமையா? - ஆர்.சி புக் வழங்காத ஷோரூம் முன் தர்ணா செய்த நபர்

author img

By

Published : Jan 20, 2023, 4:23 PM IST

திருப்பத்தூரில் இரு சக்கர வாகனத்திற்கு ஆர்.சி புக் கொடுக்காமல் நான்கு வருடங்களாக அலைக்கழித்த ஷோரூம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

வண்டி வாங்கியவர்களுக்கு இது தான் நிலைமையா..! ஆர்.சி புக் வழங்காத ஷோரூம் முன் தர்ணாவில் ஈடுபட்ட நபர்
வண்டி வாங்கியவர்களுக்கு இது தான் நிலைமையா..! ஆர்.சி புக் வழங்காத ஷோரூம் முன் தர்ணாவில் ஈடுபட்ட நபர்

வண்டி வாங்கியவர்களுக்கு இது தான் நிலைமையா..! ஆர்.சி புக் வழங்காத ஷோரூம் முன் தர்ணாவில் ஈடுபட்ட நபர்

திருப்பத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட தில்லை நகர் பகுதியில் வசிப்பவர், சபாபதி(40). இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் டிவிஎஸ் நிறுவனத்தில் இருசக்கர வாகனத்திற்கு முன்பணம் செலுத்தி, இருசக்கர வாகனத்தை தவணை முறையில் வாங்கியுள்ளார்.

சபாபதி தற்போது வரை 50ஆயிரம் ரூபாய் வரை பணம் கட்டியும்; அவர் வாகனத்திற்கு இதுவரை ஆர்.சி புக் வழங்கப்படவில்லை. இதனால் சபாபதி பலமுறை காவல்துறையின் சோதனைக்கு உட்பட்டு அபராதத் தொகையை கட்டி உள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சபாபதி தன்னுடைய வாகனத்திற்கு ஆர்.சி புத்தகம் வேண்டும் என்று அலைக்கழித்த ஷோரூம் முன் திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடி தீர்வு கிடைக்க நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் அங்கிருந்து தர்ணாவை கைவிட்டு எழுந்து சென்றதால் பரபரப்பு தணிந்தது.

இதையும் படிங்க: துபாயில் இருந்து கொண்டு வந்த நகை எங்கே? - பெண்ணை மிரட்டிய அதிமுக பிரமுகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.