ETV Bharat / state

கரோனா எதிரொலி: பசலிகுட்டை முருகன் கோயில் ஆடிப் பெருக்கு விழா ரத்து!

author img

By

Published : Aug 2, 2020, 4:54 PM IST

திருப்பத்தூர்: பசலிகுட்டை முருகன் கோயிலில் கரோனா வைரஸ் காரணமாக இன்று (ஆகஸ்ட் 2) ஆடிப் பெருக்கு விழா தடை செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Corona Echo: Pasalikuttai Murugan Temple Audiperukku Festival Canceled!
Corona Echo: Pasalikuttai Murugan Temple Audiperukku Festival Canceled!

திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் புகழ்பெற்ற அறுபடை ஶ்ரீ முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 100 வருடங்களுக்கு மேலாக பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் ஆடி 1ஆம் தேதி முதல் 18 நாள்கள் விரதமிருந்து, ஆடிப்பெருக்கு அன்று காவடி எடுத்து, அழகு குத்தி முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த வருடம் நாடு முழுவதும் கரோனா பரவலால் தொற்றின் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அம்படுத்தப்பட்டு, சுற்றுலா தளங்கள், கோயில் என அனைத்தும் மூடப்பட்டன. இதன் விளைவாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், பசலிகுட்டை திருக்கோயிலில் ஆடிப்பெருக்கு தடை செய்யப்பட்டதாக அறிவித்தார்

மேலும், பக்தர்கள் யாரும் கோயிலுக்கு செல்லாத வண்ணம் கோயிலின் அனைத்து வழித்தடங்களும் அடைத்து, திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் மதனலோகன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியும் உத்தரவிட்டார். இதனால் 100 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வந்த பசலிகுட்டை அறுபடை முருகன் கோயில் ஆடிப்பெருக்கு திருவிழா முற்றிலும் களையிழந்து காணப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.