ETV Bharat / state

ரயிலில் கழன்ற போல்ட் - திக்.. திக் பயணம்... வாணியம்பாடியில் நடந்தது என்ன?

author img

By

Published : Feb 12, 2023, 10:53 PM IST

கேரளா மாநிலம் ஆலப்புழாவிலிருந்து, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் கழன்று விழுந்த போல்டை ரயில் பயணிகள் கண்டு உரிய நேரத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் கூறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat


திருப்பத்தூர்: கேரளா மாநிலம், ஆலப்புழாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயில் இன்று (பிப்.12) மாலை 6:10 மணியளவில் வாணியம்பாடி ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலின் முன் பக்கத்திலிருந்து 5ஆவது பெட்டியின் சக்கரத்தில் உள்ள போல்ட் கழன்று இருந்துள்ளது.

ரயிலில் துண்டான போல்ட்! பெரும் விபத்து தவிர்ப்பு
ரயிலில் கழன்ற போல்ட் - உடனடியாக கூறிய ரயில் பயணிகள்.. பெரும்விபத்து தவிர்ப்பு!

இதைக் கண்டு சூதாரித்த ரயில் பயணிகள் உடனடியாக ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரயில் சக்கரத்திலிருந்து கழன்று விழுந்த போல்ட்டிற்கு பதிலாக மற்றொரு போல்ட்டை மாட்டி சரி செய்தனர்.

இதனால், விரைவு ரயில் 1.30 மணி நேரத்திற்குப் பிறகு வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. மேலும், பயணிகள் ரயில் சக்கரத்தில் கழன்று விழுந்த போல்ட் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்.. இவர்கள் தான் - ஐஜி கண்ணன் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.