ETV Bharat / state

அசாமில் தலித்துகள் மீதான தாக்குதல் - விசிக ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Oct 4, 2021, 3:33 AM IST

அசாம் மாநிலத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

http://10.10.50.85//tamil-nadu/03-October-2021/tn-tut-01-vck-agitation-vis-script-tn10058_03102021201341_0310f_1633272221_993.jpg
http://10.10.50.85//tamil-nadu/03-October-2021/tn-tut-01-vck-agitation-vis-script-tn10058_03102021201341_0310f_1633272221_993.jpg

தூத்துக்குடி: அசாம் மாநிலத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்தும், டெல்லியில் பெண் காவலர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையை கண்டித்தும் தூத்துக்குடி விசிக சார்பில் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக வடக்கு மாவட்ட செயலாளர் இக்பால் தலைமை தாங்கினார். சமூக ஆசிரியர் சபரிமாலா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பலரும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சபரிமாலா செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், காவல்துறையின் சீருடையில் இருந்த ஒரு பெண்ணை டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, உடல் அங்கங்களை சிதைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்பும் அல்லாத ஒரு கட்சி முதல்முறையாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து உள்ளது.

ஆனால், இதற்கு மேடை அனுமதி தர காவல்துறை மறுக்கிறது‌. காவல்துறையில் பணியாற்றி கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு நியாயம் கேட்டு நடத்தப்படுகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையே தடை விதிக்கிறது என்றால் நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

நியாயமாகப் பார்த்தால் இந்தப் போராட்டத்தை காவல்துறையினர் முன்னெடுத்து இருக்க வேண்டும். அதில் கட்சியினரும் பொதுமக்களும் ஆகிய நாங்கள் கலந்துகொண்டு காவல்துறைக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த பொறுப்பினை விசிக எடுத்து செய்து வருகிறது. உயிரிழந்த அந்த பெண்ணுக்காக நாம் ஒரு சொட்டு கண்ணீரையாவது விட வேண்டும் என்ற நோக்கிலும், பாசிச பாஜக அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

இதையும் படிங்க: சிவசங்கர்பாபா மீதான பாலியல் புகார் - பெண் ஆசிரியர்களிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.