ETV Bharat / state

வேட்புமனுவை வாபஸ் பெற நாளை கடைசி நாள்: சந்தீப் நந்தூரி

author img

By

Published : Mar 27, 2019, 9:40 PM IST

தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளைதான் கடைசி நாள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் சந்தீப் நத்தூரி

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது, "தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில், மொத்தம் 62 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மனு தாக்கல் செய்யப்பட்டவர்களின் வேட்புமனு அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வேட்புமனு பரிசீலனை காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 4.40 வரையில் நடைபெற்றது. இதன் முடிவில் 51 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 10 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது.

வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள். நாளை மாலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றார்


தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனைக்கு பின் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது,
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 62 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். மனுத்தாக்கல் செய்யப்பட்டவர்களின் வேட்புமனு அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வேட்புமனு பரிசீலனை காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 4.40 வரையில் நடைபெற்றது. இதன் முடிவில் 51 பேர் வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது. 10 பேர்  மனு நிராகரிக்கப்பட்டது.

1 நபருடைய மனு எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளிக்க நாளை மாலை 5 மணி வரை அவருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு வாபஸ் பெற நாளை கடைசி நாள். நாளை மாலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை குழுவினரால் இதுவரை 57 லட்சம் ரூபாய் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ரூ.32 லட்சம் ரொக்கமாகவும், ரூ.25 லட்சம் மதிப்புக்கு துணி வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுவில் மீது எழுந்த சந்தேகங்களுக்கு கட்சியினரால் விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவை குறித்து நீதிமன்றத்தை அனுகும்படியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

Visual in editing 

Will be send through FTP.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.