ETV Bharat / state

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதில் புதிய சாதனை

author img

By

Published : Jan 12, 2021, 10:42 PM IST

தூத்துக்குடி: வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அதிகளவு சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

சரக்கு பெட்டகங்களை கையாளுவதில் புதிய சாதனை
சரக்கு பெட்டகங்களை கையாளுவதில் புதிய சாதனை

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு கடந்த 8ஆம் தேதி 260.05 மீட்டர் நீளமுடைய எம்.வி.எஸ்.எஸ்.எல் பிரம்மபுத்ரா என்ற கப்பல் வந்தது.

இந்த கப்பலில் இருந்து 4,413 டி.இ.யு. சரக்கு பெட்டகங்கள் பளுதூக்கி எந்திரங்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 25 நகர்வுகளுடன் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது 2018ஆம் ஆண்டு கையாண்ட 3,979 டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை விட அதிகமாகும். கரோனாவால் சரக்கு போக்குவரத்தில் உலமெங்கும் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையில், இச்சாதனை நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில், “அக்டோபர் 2020 முதல் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளின் அளவு மெதுவாக அதிகரிக்கக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.

தற்போது காலியான சரக்கு பெட்டகங்களின் பற்றாக்குறை இல்லாமல் சீரான நிலை உள்ளன. இதனால் வரக்கூடிய மாதங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வாயிலாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும்" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: புதிய சாதனைப் படைத்த தூத்துக்குடி வஉசி துறைமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.