ETV Bharat / state

தேவாலயத்தில் கொள்ளையடித்த பணத்தை அங்கயே வைத்து எண்ணிச் சென்ற கொள்ளையன்!

author img

By

Published : Dec 18, 2019, 2:44 PM IST

தூத்துக்குடி: தேவாலயத்தில் காணிக்கைப்பெட்டியை உடைத்து பணத்தை திருடிய முகமூடி கொள்ளையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

kvk nagar church hundial theft  thoothukudi kvk nagar church hundial theft cctv footage  கேவிகே நகர் தேவலாய திருட்டு  தூத்துக்குடி தேவலாய திருட்டு  தூத்துக்குடி சமீபத்திய மாவட்டச் செய்திகள்  thoothukudi latest crime news
கிறிஸ்தவ ஆலயத்தில் கொள்ளையடித்த பணத்தை அதே ஆலயத்தில் வைத்து எண்ணி எடுத்துச் சென்ற கொள்ளையன்

தூத்துக்குடி கே.வி.கே. நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் இரவு நேர பிரார்த்தனைகளை முடித்துவிட்டு ஆலய நிர்வாகிகள் வீட்டுக்குச் சென்று விட்டனர். இன்று காலை ஆலயத்திற்கு திரும்பி வந்து பார்க்கையில், ஆலயத்தின் கதவு திறக்கப்பட்டு இருந்தது.

பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் ஆலயத்திலிருந்த காணிக்கைப் பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆலய பாதுகாவலர் மோசஸ் இந்த திருட்டு குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

கிறிஸ்தவ ஆலயத்தில் பணம் கொள்ளை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் ஆலயத்தில் நடந்த திருட்டு குறித்து அக்கம்பக்கத்தினரிடையே விசாரணை நடத்தினர். மேலும், ஆலயப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் ஆலயத்தின் காணிக்கைப் பணத்தை திருடிவிட்டு, திருடிய பணத்தை பொறுமையாக எண்ணிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது.

கிறிஸ்தவ ஆலயத்தில் கொள்ளையன்

இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவலர்கள், அதை வைத்து மூகமுடி அணிந்து வந்து கொள்ளையடித்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களால் இந்தியா எரிகிறது: திமுக தலைவர் ஸ்டாலின்!

Intro:கிறிஸ்தவ ஆலயத்தில் காணிக்கைப்பெட்டியை உடைத்து பணம் திருட்டு - முகமூடி கொள்ளையன் குறித்த சிசிடிவி காட்சியால் பரபரப்பு

Body:கிறிஸ்தவ ஆலயத்தில் காணிக்கைப்பெட்டியை உடைத்து பணம் திருட்டு - முகமூடி கொள்ளையன் குறித்த சிசிடிவி காட்சியால் பரபரப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி கே.வி.கே.நகரில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் இரவு பூஜைகளை முடித்துவிட்டு ஆலய நிர்வாகிகள் வீட்டுக்குச் சென்று விட்டனர். இந்த நிலையில் காலையில் ஆலயத்திற்கு வந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டு இருந்தது. ஆலயத்தின் உள்ளே காணிக்கைப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலய பாதுகாவலர் மோசஸ்(வயது 65) ஆலயத்தில் நடந்த திருட்டு குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆலயத்தில் நடந்த திருட்டு குறித்து அக்கம்பக்கத்தினரிடையே விசாரணை நடத்தினர். மேலும் ஆலயப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் ஆலயத்திற்குள் புகுந்து காணிக்கை பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதை வைத்து முகமூடி அணிந்து வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆலய காணிக்கைப் பெட்டியில் இருந்த ரூ.20,000 மர்ம நபர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலய பாதுகாவலர் மோசஸ் அளித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் ஆலயத்தில் திருட்டு நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.