ETV Bharat / state

வ.உ.சி சிலைக்கு மறியாதை செலுத்திய தமிழிசை...

author img

By

Published : Sep 5, 2021, 1:28 PM IST

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழாவையொட்டி, தூத்துக்குடியில் இருக்கும் அவரது நினைவு இல்லத்தில், அவரது உருவச்சிலைக்கு தமிழிசை சௌந்தர ராஜன் மரியாதை செலுத்தினார்.

tamilisai soundararajan  tamilisai soundararajan pay tributes  tributes to voc s  tributes to voc statue  tamilisai soundararajan pay tributes to voc statue  thoothukudi news  thoothukudi latest news  வ.உ.சி உருவச்சிலைக்கு மறியாதை செலுத்திய தமிழிசை  வ.உ.சி உருவச்சிலைக்கு மறியாதை  தனமிழிசை சவுந்திரராஜன்  வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள்  நினைவு இல்லம்  கப்பலோட்டிய தமிழன்  கப்பலோட்டிய தமிழனின் பிறந்த நாள்
தமிழிசை

தூத்துக்குடி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர ராஜன் சென்றார்.

அங்கு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வ.உ.சி.யின் வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

tamilisai soundararajan  tamilisai soundararajan pay tributes  tributes to voc s  tributes to voc statue  tamilisai soundararajan pay tributes to voc statue  thoothukudi news  thoothukudi latest news  வ.உ.சி உருவச்சிலைக்கு மறியாதை செலுத்திய தமிழிசை  வ.உ.சி உருவச்சிலைக்கு மறியாதை  தனமிழிசை சவுந்திரராஜன்  வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள்  நினைவு இல்லம்  கப்பலோட்டிய தமிழன்  கப்பலோட்டிய தமிழனின் பிறந்த நாள்
வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி

இதையடுத்து செய்தியாளர்களை சந்துத்து பேசிய தமிழிசை, “இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மரியாதைக்குரிய வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அணைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளையும் இளைஞர்கள் படிக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ரசிகர்களாக இருங்கள். சுதந்திரத்திற்காக அவர்கள் போராட்டம் நடத்தவில்லை என்றால் நாம் இன்று சுகமாக நடமாட முடியாது.

வ.உ.சி உருவச்சிலைக்கு மறியாதை

பாரத பிரதமர் 75வது சுதந்திர தினத்தை ஓராண்டு முழுவதும் கொண்டாட கூறியுள்ளார். குறைந்தபட்சம் 75 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் வேலை செய்த இடங்கள், படித்த இடங்கள் அவருடைய போராட்டங்கள் குறித்து தேடித்தேடி இளைஞர்கள் படிக்க வேண்டும்.

மண்ணுக்காக போராடியவர் மண்ணெண்ணெய் விற்று கடனாளியாகி வறுமையில் உயிரிழந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மொழிக்காகவும் நாட்டுப்பற்றுகாக்காகவும், சமூகத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களை அவர்கள் இருக்கும் காலத்தில் ஒவ்வொருவரும் போற்ற வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: வ.உ.சி 150ஆவது பிறந்தநாள் - புதுச்சேரியில் கட்சி தலைவர்கள் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.