ETV Bharat / state

மாநில அளவிலான யோகா போட்டி - தூத்துக்குடி மாணவர்கள் முதலிடம்

author img

By

Published : Jan 14, 2020, 10:17 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி தனியார் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Yoga Competition
Yoga Competition

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி, ஏகேஏ ஆல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன், தூத்துக்குடி சைன் யோகா பவர், தமிழ்நாடு யோகா பெடரேஷன் ஆகிய அமைப்புகள் சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.

வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ‌ யோகா போட்டியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் தொடங்கி வைத்தார்.

பல்வேறு பிரிவின் கீழ் நடத்தப்பட்ட யோகா போட்டியில் மாணவியர் பிரிவில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி விசாலினி முதலிடமும், மாணவர் பிரிவில் செயின்ட் தாமஸ் அலயேசிஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் நிரஞ்சன் முத்துவேல் முதலிடம் பெற்றனர். தனிநபர் பிரிவில் கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வேல்ஸ் பள்ளியும் கைப்பற்றின.

மாநில அளவிலான யோகா போட்டி

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ், வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவர் தாமோதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.

இதையும் படிங்க:அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூலை வெளியிட்டு 6ஆம் வகுப்பு மாணவன் சாதனை!

Intro:மாநில அளவிலான யோகா போட்டி - தூத்துக்குடி மாணவர்கள் முதலிடம்
Body:மாநில அளவிலான யோகா போட்டி - தூத்துக்குடி மாணவர்கள் முதலிடம்

தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற முதலாவது மாநில அளவிலான யோகா போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவர் மற்றும் மாணவியர் பிரிவில் தூத்துக்குடி சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி, ஏ கே ஏ ஆல் ஸ்போட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன், தூத்துக்குடி சைன் யோகா பவர் மற்றும் தமிழ்நாடு யோகா பெடரேஷன் ஆகியவை சார்பில் 11வது மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர் ‌ யோகா போட்டியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் தொடங்கி வைத்தார். பல்வேறு பிரிவின் கீழ் நடத்தப்பட்ட யோகா போட்டியில் மாணவியர் பிரிவில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி விசாலினி முதலிடமும், மாணவர் பிரிவில் செயின்ட் தாமஸ் அலயேசிஸ்மெட்ரிக் பள்ளி மாணவர் நிரஞ்சன் முத்துவேல் முதலிடம் பெற்றனர். தனிநபர் பிரிவில் கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வேல்ஸ் பள்ளியும் பெற்றன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவர் தாமோதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜோதிபாசு, வேல் செல்வி சண்முக பாண்டியன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் ஏ கே ஏ ஆல் ஸ்போட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் நிறுவனர் காசிமாரியப்பன் நன்றி கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.