ETV Bharat / state

"இந்தியா - இலங்கை உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது" - இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெருமிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 1:15 PM IST

Tiruchendur Murugan Temple: இலங்கையில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட போது, இந்தியா அரசு மற்றும் தமிழ்நாடு அரசு நிறைய உதவிகள் செய்துள்ளது, ஆகையால் இந்தியா - இலங்கை உறவு இன்னும் பலம்பெற்றுள்ளதாக இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Sri Lanka Eastern Governor visit thiruchendur murugan temple
இலங்கை கவர்னர் செந்தில் தொண்டமான்

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் செய்தியாளர்கள் சந்திப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலங்கை கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்தில் தொண்டமான், தனது குடும்பத்திருடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இலங்கையில் கரோனா காலகட்டத்திற்கு பின்னர் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் வளமை திரும்பியுள்ளது. இலங்கை வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

இந்தியா - இலங்கை உறவு எப்போதுமே நெருக்கமானது. இங்குள்ள புத்த போதனைகள் தான் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள மக்கள் அதனை பின்பற்றுகின்றனர். இது கலாச்சார அடிப்படையான உறவு. மேலும் இலங்கையில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட போது, இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு நிறைய உதவிகள் செய்துள்ளன. இதனால் நட்புறவு மேலும் வலுபெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்கள், தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருப்பதிக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்‌. அதேபோல் சிங்களர்கள் புத்த கயா, வாரணாசி போன்ற இடங்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இலங்கை மக்களின் மத வழிபாடு இந்திய பூர்வீகத்தை சார்ந்து இருப்பதால், அனைத்து மத வழிபாடுகளுக்கும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்தியா வந்து செல்கின்றனர்.

அந்த காலகட்டத்தில் இந்தியா - இலங்கை வணிக ரீதியான உறவு நெருக்கமாக இருந்தது. தற்போது இணையதளம் மூலமாக ஆன்லைன் வர்த்தகம் நடப்பதால், பழைய மாதிரி தொழில் வாய்ப்புகள் இல்லா விட்டாலும், மக்கள் அதிக அளவு வணிகத்தை பயன்படுத்தி வருகின்றனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.