ETV Bharat / state

'நீட் விவகாரத்தில் மாணவர்களின் சடலங்களை வைத்து அரசியல் செய்கின்றனர்' - பொன். ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Sep 16, 2020, 5:00 PM IST

தூத்துக்குடி: நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் சடலங்களை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றும் திமுகவின் பேச்சை நம்பி மாணவர்கள் ஏமாறவேண்டாம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

pon radhakrishnan comment neet suicide
நீட் தேர்வு விவகாரத்தில் பிணந்தின்னி கழுகுகளாய் அரசியல் செய்கின்றனர்

பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையில் 70 அடி கொடிக்கம்பத்தில் பாஜக கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

pon radhakrishnan comment neet suicide
கொடியேற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட பொன்.ராதாகிருஷ்ணன்

இதில், கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வது வருத்தம் அளிக்கக்கூடிய செயல். ஆனால், மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதுகுறித்த அச்சத்தை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

நீட் தேர்வு விவகாரத்தில் பிணந்தின்னி கழுகுகளாய் அரசியல் செய்கின்றனர்

நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் சடலங்களை வைத்து அரசியல் செய்கின்றனர். திமுகவின் பேச்சை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம். மு.க. ஸ்டாலின் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவருகிறார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யப்போகிறோம் என மு.க. ஸ்டாலின் கூறுவது வேடிக்கையானது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் முதல்வரை சந்திக்க முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.