ETV Bharat / state

ஸ்டெர்லைட் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பண்டாரம்பட்டி கிராமம்!

author img

By

Published : Apr 29, 2021, 2:19 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகட்டி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்டாரம்பட்டி  ஸ்டெர்லைட் ஆலை திறப்பு  ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பண்டாரம்பட்டி  கருப்பு கொடி  கருப்பு கொடி போராட்டம்  Black Falg  Black Flag Protest  Pandarampatti  Pandarampatti People protests against the opening of the Sterlite plant
Pandarampatti People protests against the opening of the Sterlite plant

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கொடுத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பில் இன்று (ஏப். 29) கறுப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, பண்டாரம்பட்டி கிராமத்தில் வீடுகளின் முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாசலில் கோலமிட்டு வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பண்டாரம்பட்டி மக்கள் ஒருங்கிணைப்பாளர் வசந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்தது நயவஞ்சகமான செயல்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததாகத் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற எந்தக் கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பண்டாரம்பட்டி கிராம மக்கள்

எனவே தமிழ்நாடு அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், அதன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையும் ரத்துசெய்ய வேண்டும். மீண்டும் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

அதில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (ஏப். 29) தூத்துக்குடி ஸ்டெர்லைட் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கிறோம்.

இதற்காக வீட்டு வாசலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கோலமிட்டு வீடுகளில் கறுப்புக் கொடி கட்டியும் எங்களுடைய எதிர்ப்பினைப் பதிவுசெய்துவருகிறோம். ஸ்டெர்லைட்டில் உண்மையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்கினால் மகிழ்ச்சிதான். ஆனால், அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் விஷத்தன்மை வாய்ந்தது.

மேலும் இதை ஆதாயமாகப் பயன்படுத்தி இன்னும் சிறிது காலத்திலேயே தாமிர ஆலை முழுவதையும் திறந்துவிடுவார்கள் என்ற அச்சமும் பயமும் எங்களுக்குள் இருக்கிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தமிழ்நாடு அரசும் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சுனாமி போல் பரவும் கரோனா: கவலையில் அலுவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.