ETV Bharat / state

தூத்துக்குடியில் டிராஃபிக் போலீஸ் அதிரடி சோதனை.. சிறுவர்கள் ஓட்டிய, நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளுக்கு அபராதம்!

author img

By

Published : Jun 25, 2023, 10:41 PM IST

தூத்துக்குடி மாநகரில் இளம் சிறார்கள் ஓட்டி வந்த இரு சக்கரவாகனம் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத 200க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தூத்துக்குடியில் 200க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம்
தூத்துக்குடியில் 200க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

தூத்துக்குடியில் 200க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வயது வரம்பை மீறுவது மட்டுமின்றி வேக வரம்பையும் மீறுவதால் பல்வேறு வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும், சட்ட விதிகளை கடுமையாக அமல்படுத்தியும் தினமும் சாலை விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிக வேகம், கவனக்குறைவு, சாலை ஆக்கிரமிப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் இருப்பது, கைபேசி உபயோகிப்பது, தவறான பாதையில் செல்வது, கால்நடைகள் ஆகியவற்றால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன.

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தான் வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிடம் கோரிக்கை ஒன்றை வத்திருந்தார்.

அதில், சரியான தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் ஏற்ப்படும் விபத்துகளை தடுக்க தங்கும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு அறை வழங்க அறிவுறுத்த வேண்டும் எனவும் ஓட்டுநர்கள் தங்கும் அறைக்கான குறைந்த கட்டணத்தை வாகன பார்க்கிங் கட்டணத்துடன் சேர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இருசக்கர வாகனம் பயன்படுத்தும் சிறுவர்களும் அதிகரித்து உள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட கோரி போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிடப்படு உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், ஏராளமான இளம் சிறுவர்கள் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்த போக்குவரத்து காவலர்கள் சிறார்களுக்கு அறிவுரை வழங்கினர். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் இனிமேல் இரு சக்கர வாகனங்கள் வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டனர்.

இது மட்டுமின்றி அரசு அறிவித்தபடி முறையான நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்களில், மற்றும் அதிக ஒளி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் விதிகளை மீறி மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனங்களையும் கைபற்றி காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகர் முழுவதும் இந்த சோதனை நடைபெற உள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள நாகம்.. சாமி ஆடிய பெண்ணின் வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.