ETV Bharat / state

நமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினால், நிச்சயம் அவை திரும்ப மீட்டெடுக்க முடியும் - கனிமொழி

author img

By

Published : Nov 19, 2021, 10:27 PM IST

விவசாய சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டிருப்பது, நாம் நமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினால் நிச்சயம் அவை திரும்ப மீட்டெடுக்க முடியும் என்பதை உறுதிப்படச் சொல்லும் வெற்றி எனக் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி
கனிமொழி

தூத்துக்குடி: கூட்டுறவுத்துறை சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற 68ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தொடக்கக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

அரசுப் பணிக்கு வழி காட்டப்படும்

விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைக் கடன் பெற்றுள்ள 2500 பேருக்கு 150 கோடி ரூபாய் நகைக் கடன் தள்ளுபடி செய்யத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்காகக் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் தற்பொழுது 231 பேர் சேர்ந்து பயின்று வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி முடிந்ததும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசுப் பணிக்கும் வழி காட்டப்படும்" என்றார்.

கனிமொழி
லாபத்தில் கூட்டுறவு மருந்தகங்கள்

இதனையடுத்து நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசுகையில், "தமிழ்நாட்டில் 300 கூட்டுறவு மருந்தகங்கள் லாபத்தில் செயல்பட்டு வருகின்றன.

கனிமொழி
கனிமொழி

இது தவறான ஒன்று

இதில் சில நிறுவன பெயரில் உள்ள மருந்துகளைப் பெறுவதில் மட்டுமே மக்கள் முனைப்புக் காட்டுகின்றனர். இது தவறான ஒன்று. எனவே ஜெனரிக் மருந்து விற்பனையில் மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை எழுதிக் கொடுக்க வேண்டும்" என்றார்.

கனிமொழி
கனிமொழி

இதனை தொடர்ந்து, 2030 பயனாளிகளுக்கு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளையும், கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் கனிமொழி எம்பி வழங்கினார்.

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும்

இதையடுத்து கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், "வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து விவசாயிகள். அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்துள்ளன.

கனிமொழி எம்பி பேச்சு
கனிமொழி எம்பி பேச்சு

ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி

நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நிலையில் மத்திய மோடி அரசு 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என அறிவித்திருப்பது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி.

திரும்ப மீட்டெடுக்க முடியும்

நாம் நமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினால் நிச்சயம் அவை திரும்ப மீட்டெடுக்க முடியும் என்பதை உறுதிப்படச் சொல்லும் வெற்றி. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்குக் கொடுக்கப்பட்ட அதே அழுத்தத்தை நீட் தேர்வைத் திரும்பப் பெறுவதற்கும் எதிர்க்கட்சிகள் கொடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே சட்டமியற்ற ஒரே அவை தேவையில்லை. ஒருமித்த கருத்து இருந்தாலே போதும்" என்றார்.

இதையும் படிங்க: விவசாய சட்டங்கள் வாபஸ், பாஜகவுக்கு பலன் அளிக்காது- லாலு பிரசாத் யாதவ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.