ETV Bharat / state

தூத்துக்குடியை பசுமையாக்கும் முயற்சி: 6 ஆயிரம் மரங்கள் நட அழைப்பு!

author img

By

Published : Jan 23, 2021, 4:02 PM IST

தூத்துக்குடி: மாநகராட்சி குப்பை கிடங்கை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனியார் தொண்டு நிறுவனம் 6 ஆயிரம் மரங்கள் நட பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தூத்துக்குடியை பசுமையாக்கும் முயற்சி  தூத்துக்குடியில் 6 ஆயிரம் மரங்கள் நட அழைப்பு  Attempt to green Thoothukudi  Invitation to plant 6 thousand trees in Thoothukudi  Thoothukudi green revolutionary  தூத்துக்குடி பசுமை புரட்சி
Thoothukudi green revolutionary

தூத்துக்குடியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவன செயலாளர் கிறிஸ்டோபர், இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து இன்று (ஜன.23) பேசினர். அப்போது, அவர்கள் கூறுகையில்,"சுற்று சூழலை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் கடந்த 8 ஆண்டுகளாக சுமார் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.

அதேபோல் கடந்த ஆண்டு தூத்துக்குடியில் தருவைகுளத்தில் உள்ள குப்பை கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோளின் படி 3 ஏக்கர் இடத்தை சுத்தம் செய்து மரம் நடவு செய்தோம்.

மரக்கன்று நட திட்டம்

கிட்டத்தட்ட 15 மாதங்களில் மரங்கள் அனைத்துமே 8 அடிக்கு மேல வளர்ந்து நல்ல பசுமையான காடாக காட்சியளிக்கிறது. தற்போது அடுத்த இலக்காக மாநகராட்சி ஆணையாளர் 15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்துள்ளார். இந்த இடத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் வருகிற 24ஆம் தேதி 6 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம்.

மரக்கன்று நட அழைப்பு

இதற்காக தூத்துக்குடியில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள், கல்லூரி, முன்னாள் மாணவர் சங்கங்கள் இணைந்து முயற்சி செய்து வருகிறோம். எனவே பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து நபர் ஒருவருக்கு 4 மரம் நட்டு வைக்க கேட்டுக்கொள்கிறோம். குப்பை கிடங்கை பசுஞ்சோலையாக மாற்றினால் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க சிறந்த நகரமாக தூத்துக்குடியை மாற்ற மரங்களை நட அழைக்கிறோம்" என்றனர்.

இதையும் படிங்க: பசுமை புரட்சி செய்யும் விவசாயி பாஸ்கர் - ஆயுள் தரும் விவசாயிக்கு மக்கள் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.