ETV Bharat / state

நீட் விலக்கு வேண்டும் என்று சொல்ல எடப்பாடிக்கு திராணி உள்ளதா... அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!

author img

By

Published : Aug 20, 2023, 3:46 PM IST

Neet Exemption Issue : நீட் விலக்கு வேண்டும் என்று சொல்ல எடப்பாடிக்கு திராணி இல்லை என தூத்துக்குடியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் சாடி உள்ளார்.

Geethajeevan
கீதாஜீவன்

நீட் விலக்கு வேண்டும் என்று சொல்ல எடப்பாடிக்கு திராணி உள்ளதா?... கீதாஜீவன் சாடல்

தூத்துக்குடி: நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

போராட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்,

”ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா போன்ற இடங்களில் நீட் தேர்வு கிடையாது. தமிழகத்திலும் வேண்டாம் என்று கூறி வருகிறோம். நீட் தேர்வை விலக்கக்கூடிய வழிவகை இருந்தும் மோடி அரசு இதனை செய்ய மறுக்கிறது. தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஆகவே, தமிழகத்தை வஞ்சிக்கும் பொருட்டு, தமிழக மாணவர்களை கெடுக்கும் வண்ணமாக உயர்கல்வி படிக்கக்கூடாது என்ற நோக்கத்தை மட்டுமே மறைமுக அஜண்டாவோடு மத்திய அரசு செயல்படுகிறது.

இதையும் படிங்க: NEET Exemption Issue : தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்!

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியில் கூறினீர்களே என்று சிறுபிள்ளைத்தனமாக நம்மிடையே கேட்கின்றார். நீங்கள் (எடப்பாடி) என்ன சொல்ல வேண்டும். நீட் விலக்கு வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு திராணி இல்லை. எடப்பாடிக்கு விளையாட்டுத்துறை அமைச்சரையும், முதல்வரையும், திமுக கட்சியினரையும் வஞ்சிக்கும் வண்ணமாக பேசுகிறார். நீட் விலக்கு வேண்டும் என்று தமிழக மக்களுக்காக எடப்பாடியால் பேச முடியவில்லை” என்றார்.

பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”மாணவர்கள் மருத்துவ தேர்வுக்கு செல்ல முடியாத காரணத்தினால் இன்று சிக்கி திணற கூடிய சூழ்நிலையில் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் தங்களுடைய கனவு சிதைந்து விட்டது என்ற வகையிலே இன்றைக்கு அவர்களே மாய்த்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு உருவாகி இருக்கிறார்கள். அதற்கு காரணம் மத்திய அரசாங்கம்.

ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்களிக்க நான் கையெழுத்து போட மாட்டேன். இதனை ஆதரிக்கவே மாட்டேன் என்று சொல்கின்றார் என்றால் ஆளுநருக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது. தமிழகத்தில் இருக்கின்ற மக்களை பற்றி அவர் கொஞ்சமாவது சிந்திக்கிறாரா? அவருடைய எண்ணங்கள் எல்லாம் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேலே செல்ல வேண்டும் என்று வகையில் இருப்பதாக” கூறினார்.

இதையும் படிங்க: உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனான ரஜினி சந்திப்பின் பின்னணி - குழப்பத்தில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.