ETV Bharat / state

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை? இளைஞரின் செயலால் பரபரப்பு

author img

By

Published : Nov 4, 2020, 5:22 PM IST

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில், 11 மாத ஆண் குழந்தை சில மணி நேரம் காணாமல் போனதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர்

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடியை சேர்ந்தவர்கள் சக்திவேல்- சந்தியா தம்பதியினர். இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் மின் நிலைய பணியில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தியா இரண்டாம் முறையாக கருத்தரித்தார். இதை விரும்பாத அவர்கள் கருக்கலைப்பு செய்வதற்காக சந்தியாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சக்திவேல், மனைவியை தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டுவிட்டு அதே மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். சக்திவேலின் 11 மாத ஆண் குழந்தையை பாட்டி ரேவதி கவனித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பச்சிளங்குழந்தை வார்டு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து ரேவதியுடன் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட இளைஞர் 1 மாத ஆண் குழந்தையுடன் விளையாடுவதாக வலம் வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் குழந்தையுடன் வாலிபர் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், ரேவதி மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார்.

பின்னர் திரும்பிவந்து பார்க்கையில் குழந்தையும்-வாலிபரும் மாயமாகி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் குழந்தையை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என எண்ணி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறை அதிகாரிகள் குழந்தை மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.அச்சமயத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தையுடன் அந்த இளைஞர் திரும்பி வந்துள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் தூத்துக்குடி பண்டாரம் பட்டியை சேர்ந்த மோகன் என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.

இளைஞரிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை
இளைஞரிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

வழக்கமாக டீ வாங்குவதற்காகவும், விளையாட்டு காண்பிக்கவும் சக்திவேலின் குழந்தையுடன் வெளியே சென்று வரும் அவர், இன்றும் அதேபோல் விளையாட்டு காண்பிப்பதற்காக வெளியே கூட்டிச்சென்று திரும்பி வருவதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டதால் குழந்தை கடத்தப்பட்டு இருப்பதாக தவறாக கருதப்பட்டு புகார் அளிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மோகனை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவலர்கள் அவரிடம் விளக்க கடிதம் பெற்றுக்கொண்டு திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:

பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.