ETV Bharat / state

திருமாவளவன் சுவர் ஓவியம் அழிப்பு: விசிகவினர் புகார்

author img

By

Published : Jul 23, 2021, 12:22 PM IST

திருவாரூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சுவர் ஓவியத்தை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிகவினர் காவல் துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

thirumavalavan wall painting destroy
விசிக

திருவாரூர் நகர காவல் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் வடக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் படத்துடன் கூடிய சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகரில் தட்சிணாமூர்த்தி கோயில் பின்புறம் உள்ள புறம்போக்கு சுவற்றில் திருமாவளவன், தந்தை பெரியாரின் படம் வரையப்பட்டிருந்தது. நேற்றிரவு (ஜூலை22) சிலர் அந்த விளம்பரத்தை அழித்து, தங்களுடைய முகநூலில் வெற்றி வெற்றி என பதிவு செய்திருக்கிறார்கள்.

thirumavalavan wall painting destroy
திருமாவளவன் சுவர் ஓவியம் அழிப்பு

இரவோடு இரவாக சுவர் விளம்பரத்தை அழித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சமத்துவமே பௌத்தத்தின் இறுதி இலக்கு' - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.