ETV Bharat / state

'எலிகளை அழிக்க அதிமுக அரசு என்ன செய்தது?' - எம்எல்ஏ ஆடலரசன்

author img

By

Published : Oct 23, 2019, 6:13 AM IST

திருவாரூர்: "பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை அழிப்பதற்கு திமுக நடவடிக்கை எடுத்தது போல் கடந்த ஏழு ஆண்டுகளில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன் தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன் பேட்டி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன் கலந்துகொண்டார். பின்ணர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளை அளவீடு செய்த தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் வழங்கிய தொகையை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் கணக்கில், நிலுவையில் உள்ள கடனுக்கு வரவு வைக்காமல் முழுவதுமாக விவசாயிகளிடம் வழங்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன் பேட்டி

டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடியானது துவங்கிய நிலையில் நடவுபணிகளும் நடைபெற்று முடிந்துள்ளது. மழையும் தொடர்ந்து பொழிந்து வருவதால் போதிய தண்ணீரும் ஆற்றில் ஓடுவதால் விவசாயிகள் சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ளலாம்" என்றார்.

மேலும், பயிர்களை எலிகள் அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றன. திமுக ஆட்சியில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது போல், கடந்த ஏழு ஆண்டுகளில் அதிமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை உடனடியாக ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்க :

மாநகராட்சி ஊழியர்களுடன் டிராபிக் ராமசாமி வாக்குவாதம்!

Intro:Body:விவசாய பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை அழிக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் கோரிக்கை.

டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடியானது துவங்கிய நிலையில் நடவுபணிகளும் நடைபெற்று முடிந்துள்ளது.மழையும் தொடர்ந்து பொழிந்து வருவதால் போதிய தண்ணீரும் ஆற்றில் ஓடுவதால் விவசாயிகள் சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறேன்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் கடந்த ஆண்டுடில் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளை அளவீடு செய்துள்ளது. காப்பீட்டு நிறுவனம் வழங்கிய தொகையை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் கணக்கில், நிலுவையில் உள்ள கடனுக்கு வரவு வைக்காமல் முழுவதுமாக விவசாயிகளிடம் வழங்க வேண்டும்.

மேலும் விவசாய பயிர்களில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் எலிகளை ஒழிப்பதற்கு திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை அழிப்பது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக இந்த அரசு எந்த ஒரு செயலையும் செய்ய வில்லை. எனவே பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை உடனடியாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.