ETV Bharat / state

10 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல் - காவல் துறை விசாரணை!

author img

By

Published : Jul 15, 2020, 1:44 AM IST

திருவாரூர்: மன்னார்குடி அருகே சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1000 கிலோ புகையிலை பொருள்களையும், 10 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Ten lakh worth of tobacco products seized - Police investigation!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் நேற்று மாலை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மினி லாரி , கார் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் மறித்து சோதனை நடத்தினர்.

சோதனையில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1000 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் கடத்தல்காரர்களிடம் இருந்து சுமார் 10 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சோதனையில் காரில் வந்தவர்கள் தப்பி ஓட முயன்றபோது, அதில் இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், புதுக்கோட்டையிலிருந்து போதைப் பொருள்கள் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அதன்பின் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.