ETV Bharat / state

குளத்தில் கிடந்த சாக்கு பண்டல்கள் - அதிர்ச்சியடைந்த விவசாயிகள்

author img

By

Published : Oct 19, 2020, 7:50 PM IST

திருவாரூர்: நெல் கொள்முதல் நிலையம் அருகே உள்ள குளத்தில் அரசுக்குச் சொந்தமான பத்து சாக்கு பண்டல்கள் குளக்கரையில் கிடந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

thiruvarur
thiruvarur

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்ணாரப் பேட்டையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர்.

விவசாயிகளிடம் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மீண்டும் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காக எடுத்துவரப்பட்ட 215 நெல் மூட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன. கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள், மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையுடன் இணைந்து நெல் மூட்டைகளை ஆய்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக கண்ணாரப்பேட்டை கொள்முதல் நிலைய பணியாளர்கள் ஆனந்தராஜ், கனகராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

குளத்தில் கிடந்த சாக்கு பண்டல்கள்

இந்நிலையில் கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே உள்ள குளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாக்குகள் குளத்தில் மிதப்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சாக்குகள் பற்றாக்குறை உள்ளதாகக் கூறி வரும் நிலையில், கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே சாக்கு பண்டல்கள் குளத்தில் கிடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.