ETV Bharat / state

"அதிமுகவிற்கு இனி வளர்பிறை தான்... நோ தேய்பிறை" - அமைச்சர் காமராஜ்

author img

By

Published : Jan 19, 2020, 11:52 AM IST

திருவாரூர் : அதிமுகவிற்கு இனி வளர்பிறை தான், அதற்கு தேய்வு என்பதே கிடையாது என்று அமைச்சர் காமராஜ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

minister kamaraj
minister kamaraj

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாஸ்கர் முன்னிலையில் திமுக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், "அதிமுகவிற்கு இனி வளர்பிறை தான். அதற்கு தேய்வு என்பதே கிடையாது. எட்டரை ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எந்த இயக்கத்திற்கும் கிடைத்திடாத வெற்றி அதிமுகவிற்கு கிடைத்திருக்கிறது. வருகின்ற 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூாில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் விவசாயிகள் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெறும்.

அமைச்சர் காமராஜ் செய்தியாளர் சந்திப்பு

'காங்கிரஸை திமுகவினர் இதைவிட கேவலப்படுத்த முடியாது' - அமைச்சர் ஜெயக்குமார்

நெல்லுக்கு ஊக்கத் தொகை இதுவரை 718 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

Intro:Body:அதிமுகவிற்கு இனி வளர்பிறை தான் அதற்கு தேய்வு என்பதே கிடையாது அமைச்சர்
காமராஜ் மன்னார்குடியில் பெருமிதம் .

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தெற்கு ஒன்றியம் வெங்கத்தாங்குடி முன்னாள்
ஊராட்சி மன்ற தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாஸ்கர்
முன்னிலையில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 60-க்கும்
மேற்பட்டவர்கள் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர் அதனை தொடர்ந்த
செய்தியாளர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டியளித்தார் .

அதிமுக இனி வளர்பிறை தான் அதற்கு தேய்வு என்பதே கிடையாது . எட்டரை
ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எந்த இயக்கத்திற்கும்
கிடைத்திடாத வெற்றி அதிமுகவிற்கு கிடைத்திருக்கின்றது .

வருகின்ற 21-ந்தேதி காலை 10-மணிக்கு தஞ்சாவூாில் மூன்று மாவட்ட
ஆட்சியர்கள் தலைமையில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் .

திமுக ஆட்சி காலத்தில் நெல் குவிண்டால் 1080 ரூபாய் இருந்தது அதிமு
ஆட்சியில் 2000 ரூபாய் ஆக மாற்றபட்டள்ளது . நெல்லுக்கு ஊக்க தொகை இதுவரை
718 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது .

மழையின் காரணமாக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நெல் கொள்முதல்
செய்யபடும் என்றார் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.