ETV Bharat / state

திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையங்கள் - விவசாயிகள் வேதனை

author img

By

Published : Jul 25, 2021, 10:43 AM IST

திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்
திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்

நன்னிலம் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 15 நாள்களுக்கும் மேலாக நெல்லைக் கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவாரூர்: நன்னிலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது, பல்வேறு இடங்களில் அறுவடைப் பணிகள் முடிவுற்ற நிலையில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் வைத்தனர். ஆனால், கொள்முதல் நிலையங்கள் திறக்கபடாமல் இருந்து வருகிறது.

கிடப்பில் போடப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

நீண்ட நாள்களாகியும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கினறனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, 'இந்தாண்டு நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.

தற்போது அறுவடைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக பேரளம், கொல்லாபுரம், குருங்குளம், திருமிச்சியூர், கொல்லுமாங்குடி, மாங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை பேரளத்தில் இயங்கி வந்த அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக அடுக்கி வைத்து காத்திருந்து வருகிறோம்.

ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்த விவசாயிகள்

நெல் மணிகள் அடிக்கடி பெய்து வரும் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. நெல் மூட்டைகளை தினந்தோறும் இரவு, பகல் என நேரம் பார்க்காமல் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இது குறித்து பலமுறை மண்டல மேலாளரிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு உடனடியாக பேரளத்தில் செயல்பட்டுவரும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நெல் கொள்முதல் மையத்தை முற்றுகையிட்டு உழவர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.