ETV Bharat / state

தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - முத்தரசன் பேட்டி!

author img

By

Published : Nov 21, 2019, 1:33 AM IST

திருவாரூர்: தமிழ்நாடு அரசு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

mutharasan

இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்ததால் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை நடத்த வலியுறுத்தி வந்தன.

தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசானது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது முடிவு செய்து, அதை அவசர சட்டமாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

மாநில செயலாளர் முத்தரசன்

அதிமுக அரசானது ஆட்சி, அதிகாரம், பணபலம், படை பலத்தை பயன்படுத்தி முற்றிலுமாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றுவதற்கான செயல்களில் ஈடுபட்டுவருகிறது. எனவே, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை திரும்பப் பெறுவதோடு, மக்கள் நேரடியாக தங்களின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்: தமிழ்நாடு அரசு அரசாணை!

Intro:Body:தமிழக அரசானது உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் பேட்டி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து
தெரிவித்ததாவது,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நீண்டகாலமாக நடைபெறவில்லை, உச்சநீதி மன்றம் நடத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இந்நிலையில் அமைச்சரவை கூடி நகராட்சி, பேரூராட்சி , மாநகராட்சிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்து அதை வெளிப்படையாக அறிவிக்காமல் அவசர சட்டம் மூலமாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

அதிமுக அரசானது ஆட்சி அதிகாரம், பணபலம், படை பலத்தை பயன்படுத்தி முற்றிலுமாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றுவதற்கான செயல்களில் ஈடுபடுகிறது. மேலும் தமிழகரசு பிறப்பித்த அவசர சட்டத்தை திரும்ப பெறுவதோடு மக்கள் நேரடியாக தங்களின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.