ETV Bharat / state

வலுக்கும் போராட்டம்: பிரதமருக்கு 10ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பி வைப்பு

author img

By

Published : Jul 24, 2019, 5:40 PM IST

திருவாரூர்:  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிரதமர் மோடிக்கு 10ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பினர்.

aiyf protest

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டம் முழுவதும் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு 10ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பினர். இதை தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தபால் அட்டைகள்
தபால் அட்டைகள்
Intro:


Body:திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிரதமர் மோடிக்கு 10,000 தபால் அனுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஒஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டம் அல்லாது தமிழகம் முழுவதும் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு ஒரு லட்சம் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் திருவாரூரில் தலைமை தபால் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால்களை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்து, இத்திட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.