ETV Bharat / state

பெற்றோரை ஆசையாக காணச் சென்றவர் பேருந்துக்குள்ளேயே வைத்து படுகொலை..

author img

By

Published : Sep 28, 2019, 3:23 PM IST

திருவண்ணாமலை: பெற்றோரை காண ஆசையோடு புறப்பட்ட இளைஞர், பேருந்துக்குள்ளேயே வைத்து 10 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் செய்யார் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை இளைஞர் வெட்டிப் படுகொலை

காஞ்சிபுரம் பிள்ளையார்ப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காளத்தி முருகன், கிருபாவதி தம்பதியினர். இவர்களின் மகன் சதீஷ்குமார் (28) கடந்த ஒரு வருடமாக இவர்களை பிரிந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில தன் பெற்றோர்களை ஆசையுடன் சந்திப்பதற்காக இன்று இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இவரை செய்யார் நகரில் உள்ள சௌந்தரி திரையரங்கம் எதிரில் இனோவா காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர்.

இளைஞர் ஒருவரை பேருந்துக்குள்ளேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட கோரச்சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் நடந்துள்ளது.

பின்னர் உயிருக்கு பயந்து ஓடி அந்த வழியே வந்த பேருந்தில் ஏறிய சதீஷ்குமாரை அவர்கள் பேருந்துக்குள்ளேயே வைத்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

பாத்திரக்கடை உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை -போலீசார் விசாரணை

Intro:தாய் தந்தையரை காண இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை வழிமறித்து 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு.Body:திருவண்ணாமலை      28.09.2019

தாய் தந்தையரை காண இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை வழிமறித்து 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரில் உள்ள சௌந்தரி திரையரங்கம் எதிரில் இரண்டு சக்கர வாகனம் புல்லட்டில் வந்த சதீஷ்குமார் வயசு 28 என்பவரை இனோவா காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது, உயிருக்கு பயந்து ஓடி பேருந்தில் ஏறிய பிறகு கொலை கும்பல் பஸ்ஸில் ஏறி அறிவால்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர், வெட்டிய பிறகு தாங்கள் வந்த இனோவா காரில் ஏரி தப்பிச்சென்றுள்ளனர்.


வெட்டுபட்ட இளைஞர் சதீஷ்குமார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், சதீஷ்குமாரின் தந்தையார் பெயர் காளத்தி முருகன், தாயார் கிருபவதி
இவர்கள் காஞ்சிபுரம் பிள்ளையார்
பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்
தாய் தந்தை இருவரும் மகன் சதீஷ்குமாரை பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்யாறில் குடி பெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். 


இன்று தாய் தந்தையரை காணவந்த சதீஷ்குமாரை பின் தொடர்ந்து வந்து 10 பேர் கொண்ட ரவுடி கும்பல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர், இந்த சம்பவம் செய்யாறில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Conclusion:தாய் தந்தையரை காண இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை வழிமறித்து 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.