ETV Bharat / state

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட ரிலீஸ் - 'ஸ்நேக் பாபு' பெயரில் பிரியாணி கடை திறந்த வடிவேலு ரசிகர்கள்

author img

By

Published : Dec 9, 2022, 4:58 PM IST

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் 'ஸ்நேக் பாபு’ என்னும் பெயரில் ஹோட்டலை ஆரம்பித்து, 25 பைசாவுக்கு பிரியாணியை விற்பனை செய்துள்ளனர்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட ரிலீஸை முன்னிட்டு பிரியாணி கடை திறந்த வடிவேலு ரசிகர்கள்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட ரிலீஸை முன்னிட்டு பிரியாணி கடை திறந்த வடிவேலு ரசிகர்கள்

திருவண்ணாமலை: பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதனைக்கொண்டாடும் விதமாக திருவண்ணாமலை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில், வடிவேலு ரசிகர்களான ராம், தசரதன் மற்றும் ஆதித்யன் எனும் இளைஞர்கள் மூவர் சேர்ந்து ’ஸ்நேக் பாபு’ என்ற உணவகத்தினை திறந்து உள்ளனர்.

திறப்பு விழா சலுகையாக பழைய 25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வாங்க, கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் முண்டியடித்து ஹோட்டலில் குவிந்தனர்.

வடிவேலு கூறிய ”யாருக்காகவும், எதற்காகவும், எப்போதும் காலையில் சாப்பாடு, மதியம் சாப்பாடு, ராத்திரி சாப்பாடு இந்த மூன்று விஷயத்தையும் விட்டுக் கொடுக்காதீங்க” என்பதை தான் தங்கள் தாரக மந்திரமாக வைத்து செயல்படுவதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட ரிலீஸ் - 'ஸ்நேக் பாபு' பெயரில் பிரியாணி கடை திறந்த வடிவேலு ரசிகர்கள்

மேலும் பொதுமக்களையும் இளைஞர்களையும் கவரும் வகையில், “கையில பணம் ரொம்ப கம்மியா இருக்கு பரவாயில்ல...ஸ்நேக் பாபு’ ஹோட்டல்ல 25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி கொடுக்குறாங்க, அதை வாங்கி சாப்பிடுவோம்” என்று நூதன முறையில் பேனர் வைத்து மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பி அசத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயலால் வலுவிழந்த வைகைப்புயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.