ETV Bharat / state

பணி நிறைவடையாத அறிவியல் பூங்கா அவசரகதியில் திறப்பு!

author img

By

Published : Mar 17, 2020, 8:46 AM IST

திருவண்ணாமலை: மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா முழுமையாக பணி நிறைவடையாத நிலையில் அவசரகதியில் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி.

unfinished science park opened for public
பணி நிறைவடையாத அறிவியல் பூங்கா அவசரகதியில் திறப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் கிராம ஊராட்சி, மாவட்ட ஆட்சியரகம் எதிரில் உள்ள ஏரிக்கரை அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக மாநில நிதி குழு, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நல நிதி, சமூக பொறுப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் ரூ. மூன்று கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அறிவியல் பூங்கா கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி திறந்து வைத்து பார்வையிட்டார்.

முழுமையாக பணி நிறைவடையாத நிலையில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் சேதமடைந்துள்ளன. மேலும் அங்கு உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் காட்சிப் பொருள்கள், உபகரணங்கள் ஆகியவை பொதுமக்கள் பார்வையிடாத போதே சேதமடைந்துள்ளன. இதனால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்துப் பணிகளும் முறையாக நிறைவேற்றி பொதுமக்களுக்கு முழுவதும் பயனளிக்கும் வகையில் அறிவியல் பூங்காவை திறக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.