ETV Bharat / state

திருவண்ணாமலை உண்டியல் காணிக்கை எவ்வளவு?

author img

By

Published : Nov 20, 2019, 9:11 AM IST

திருவண்ணாமலை: அண்ணாமலையார் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

thiruvannamalai-undiyal

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் மூன்றாம் பிரகார கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் 300 கோயில் பணியாளர்கள் மற்றும் சிவனடியார்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் தங்கம் 243 கிராம், வெள்ளி 706 கிராம், தவிர ஒரு கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 315 ரூபாய் எனப் பக்தர்களின் காணிக்கை இருந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

மேலும், சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் செலவில் புதிதாக சில்லறைக் காசு எண்ணும் இயந்திரம் பக்தர்களால் அண்ணாமலையார் ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. அந்த சில்லறை எண்ணும் இயந்திரத்தில் சில்லறைகள் எண்ணப்பட்டன. காணிக்கையில் வெளிநாட்டுப் பணமும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

மலையை உடைக்காமல் பட்டா வழங்க பொதுமக்கள் கோரிக்கை!

Intro:ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் வருவாய்
ரூபாய் 1,10,26,315/
தங்கம் 243 கிராம்
வெள்ளி 706 கிராம்.
Body:ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் வருவாய்
ரூபாய் 1,10,26,315/
தங்கம் 243 கிராம்
வெள்ளி 706 கிராம்.


நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. உண்டியலில் தங்கம் 243 கிராம், வெள்ளி 706 கிராம், பணம் ஒரு கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 315 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக போடப்பட்டது. அண்ணாமலையார் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் திரு ஞானசேகரன் 300 கோயில் பணியாளர்கள் மற்றும் சிவனடியார்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்நிலையில் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் செலவில் புதிதாக சில்லறை காசு என்னும் இயந்திரம் பக்தர்களால் அண்ணாமலையார் ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. இன்று அந்த சில்லரை என்னும் எந்திரத்தில் சில்லறைகள் எண்ணப்பட்டது. தன்னார்வத் தொண்டர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களும் கோவில் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கை பணத்தில் வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்தது.

Conclusion:ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் வருவாய்
ரூபாய் 1,10,26,315/
தங்கம் 243 கிராம்
வெள்ளி 706 கிராம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.