ETV Bharat / state

அறிவியல் பூங்காவை திறந்துவைத்த அமைச்சர்

author img

By

Published : Feb 7, 2020, 3:59 PM IST

திருவண்ணாமலை: ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவினை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்துவைத்து பார்வையிட்டார்.

Science Park at tiruvannamalai
SP Velumani inaugurated Science Park

திருவண்ணாமலை வேங்கிக்கால் கிராம ஊராட்சியில் மாநில நிதிக்குழு, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, கனிமங்கள், சுரங்கங்கள் நலநிதி, சமூகப் பொறுப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் 2019 - 2020ஆம் ஆண்டு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவினை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்துவைத்து பார்வையிட்டார்.

அறிவியல் பூங்காவினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்து பார்வையிட்டார்

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர். அறிவியல் பூங்காவில் இயந்திரப் பொறியியல், இயற்பியல், உயிரியல், வான்வெளியில் சம்பந்தமான அறிவியல் மாதிரி உபகரணங்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அங்கு அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார் மாணவர்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

science park vengikkal tiruvannamalai
பள்ளி மாணவர்களின் கோலாட்டம்

மேலும் பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் இசை கச்சேரி, கோலாட்டம், விழிப்புணர்வு நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளையும் அமைச்சர்கள், பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர்.

பின்னர் திருவண்ணாமலை செங்கம் கிரிவல பாதையில் அக்னி தீர்த்த தோரண வாயிலை தொடங்கிவைத்து பக்தர்கள் புனித நீராடும் நிகழ்ச்சியையும் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் மீது புகாரளித்த சிறுவன் - 'நாளை வரும்படி' கூறிய காவல் துறை!

Intro:ரூ.3 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா, அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்
Body:ரூ.3 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா, அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் கிராம ஊராட்சியில், மாநில நிதிக்குழு, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நலநிதி, சமூகப் பொறுப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் 2019 2020 ஆம் ஆண்டு, ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவினை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

அறிவியல் பூங்காவில் எந்திரப் பொறியியல் ஒலி ஒளி வெப்பம் இயற்பியல் உயிரியல் வான்வெளியில் சம்பந்தமான அறிவியல் மாதிரி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பூங்கா வை திறந்து வைத்த அமைச்சர் வேலுமணி அங்கு அமைக்கப்பட்டிருந்த நடைபாதை உடற்பயிற்சி உபகரணங்கள் விளையாட்டுப் பொருட்கள் மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர். மாணவர்களின் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது

மேலும் பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் இசைக்கச்சேரி கோலாட்டம் விழிப்புணர்வு நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளையும் அமைச்சர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர்.

பின்னர் திருவண்ணாமலை செங்கம் கிரிவலப்பாதையில் அக்னி தீர்த்த தோரண வாயிலை துவக்கி வைத்து பக்தர்கள் புனித நீராடும் நிகழ்ச்சியையும் அமைச்சர் வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்.

Conclusion:ரூ.3 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா, அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.