ETV Bharat / state

தி.மலை கிளி கோபுரத்தில் திரும்பப் பெறப்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்பு

author img

By

Published : Dec 16, 2019, 3:47 PM IST

திருவண்ணாமலை: காவல் துறைக்கும் கோயில் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிளி கோபுரத்தில் போடப்பட்டிருந்த காவல் துறையினரின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

thiruvannamalai
thiruvannamalai

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா கடந்தவாரம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது கோயில் ஊழியர்கள் கோயிலுக்குள் வர முயற்சித்தபோது, வெளியூரிலிருந்து வந்த காவல் துறையினர் இந்து சமய அறநிலையத் துறை, கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஊழியர்களைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக உள்ளே விடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக காவல் துறையினர் கோயிலுக்குள் நுழைய முயற்சித்தபோது கோயில் நிர்வாக ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இப்படி காவல் துறைக்கும் கோயில் நிர்வாக ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் உள்ள கோயில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு காவல் துறையினர் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

thiruvannamalai
காவல் துறையினரின்றி காவல் துறை கட்டுப்பாட்டு அறை

இதனால் கொட்டும் மழையிலும் சாமி தரிசனம் செய்வதற்கு வந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெளியூரிலிருந்து அண்ணாமலையாரை தரிசிக்க வந்த பக்தர்கள், காவல் துறை பாதுகாப்பு சரியாக இல்லாத காரணத்தால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாமி தரிசனம் செய்ய நேரமாகிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் இல்லாததால் கோயிலில் தள்ளுமுள்ளும் பெரும் குழப்பமும் நேரிட்டது. பாதுகாப்புப் பணியில் காவலர்கள் இல்லாததாலும் விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்ததால் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் கோயிலுக்குச் செல்வதும் கோயிலுக்குள் பக்தர்களை ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை கிளி கோபுரம்

இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபி சக்கரவர்த்தியிடம் விசாரித்தபோது, சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்ததாகவும் அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகள் உள்ளே சென்று தரிசிக்க முடியாத வகையில் மூடப்பட்டிருந்தது என்றும் கூறினார்.

கோயிலுக்குள் சென்று அமர்ந்து சாமி தரிசனம் செய்ய சன்னதியைத் திறக்க வேண்டும் என்று காவல் துறையினர் கூறியும் ஊழியர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி, மனைவி, குடும்பத்தினருடன் மூலவர் சன்னதியின் முன்பு நின்று தரிசனம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

இதன் தொடர்ச்சியாகவே இன்று காவல் துறையினரின் பாதுகாப்பு விலக்கப்பட்டிருக்கலாம் என்று கோயில் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க...

பேருந்தை கொளுத்த போலீஸ், மாணவர்களை அடிக்க அடியாட்கள்!

Intro:காவல்துறைக்கும் கோயில் நிர்வாகத்துக்கும் இடையே மோதல், கிளி கோபுரத்தில் இருந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது
Body:காவல்துறைக்கும் கோயில் நிர்வாகத்துக்கும் இடையே மோதல், கிளி கோபுரத்தில் இருந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கோயில் ஊழியர்கள் கோயிலுக்கு வர முயற்சித்த போது, வெளியூரிலிருந்து வந்த காவல்துறையினர் இந்து அறநிலையத்துறை கோயில் நிர்வாகத்தை சேர்ந்த ஊழியர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே விடவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை மனதில் வைத்துக் கொண்டு கோயில் நிர்வாக ஊழியர்கள் நேற்று காவல்துறையினரை கோயிலுக்கு உள்ளே சாமி தரிசனம் செய்ய நுழைய முயற்சித்த போது உள்ளே விடவில்லை என்று கூறப்படுகிறது.

இப்படி காவல்துறைக்கும், கோயில் நிர்வாக ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் உள்ள கோயில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு காவல்துறையினர் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்தவர்கள் பெருத்த இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

வெளியூரில் இருந்து அண்ணாமலையாரை தரிசிக்க வந்த பக்தர்கள், காவல்துறை பாதுகாப்பு சரியாக இல்லாத காரணத்தால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாமி தரிசனம் செய்ய நேரமாகிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.


திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கோவிலில் தள்ளுமுள்ளும் பெரும் குழப்பமும் நேரிட்டது. இந்த நிலைமை பக்தர்கள் மனதில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

பாதுகாப்புப் பணியில் காவலர்கள் இல்லாததால், விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்ததால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் கோயிலுக்குச் செல்வதும், கோயிலுக்குள் பக்தர்களை ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. குழப்பம் நேரிட்டது.


இதுபற்றி விசாரித்தபோது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி, சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்ததாகவும் மூலவர் அருணாச்சலேசுவரர் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகள் உள்ளே சென்று தரிசிக்க முடியாத வகையில் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கோயிலுக்குள் சென்று அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய சன்னதியைத் திறக்க வேண்டும் என்று காவல்துறையினர் கூறியும் ஊழியர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் எரிச்சலுற்றுக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி, மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மூலவர் சன்னதியின் முன்பு நின்று கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று கோவில் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே இன்று காவல்துறையினர் விலக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Conclusion:காவல்துறைக்கும் கோயில் நிர்வாகத்துக்கும் இடையே மோதல், கிளி கோபுரத்தில் இருந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.