ETV Bharat / state

செய்யார் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jun 23, 2022, 7:56 PM IST

செய்யாறு அருகே மேல்மா - சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த தேத்துறை, நெடுங்கல் கிராமங்களில் மேல்மா-சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேல்மா-சிப்காட் திட்டம் என்ற பெயரில் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்களை தரிசு நிலம் என்று கூறி மேல்மா, தேத்துறை, நெடுங்கல், நர்மாபள்ளம், குரும்பூர், வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, அய்யவாடி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களை முற்றிலுமாக தமிழ்நாடு அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி செய்யாறு பதிவாளர் அலுவலகத்தில் குறிப்பிட்ட சர்வேஎண்களை சுவற்றில் ஒட்டி இந்த எண்களை பதிவு செய்ய மாட்டோம் என்று அறிவிப்பு செய்துள்ளார்கள். ஏற்கெனவே மாங்கால் சிப்காட்டிற்கு எடுத்த நிலத்தில் பாதிக்கு மேல் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் சிப்காட்டிற்காக எடுக்கப்பட்ட நிலங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படி விவசாய விளை நிலங்களை தரிசு என்று பொய் கணக்கு காட்டி விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிப்பது மக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அதோடு இந்த விவசாயிகளை விவசாய நிலத்தில் இருந்து வெளியேற்றினால் அனைவரும் கூலி தொழிலாளியாக மாறும் அபாயம் உள்ளது. எனவே மேல்மா-சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வயலில் இறங்கி கறுப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் அழிவின் விளிம்பில் பேரிக்காய் விவசாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.