ETV Bharat / state

Etv Bharat Impact: கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆபீஸில் டைல்ஸ்கள் மாற்றம்!

author img

By

Published : Feb 24, 2023, 10:37 AM IST

Updated : Feb 24, 2023, 10:59 AM IST

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் அதிக சத்தத்துடன் டைல்ஸ் கற்கள் வெடித்து பெயர்ந்த சம்பவம் தொடர்பாக ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக பொதுப்பணித்துறையினர் புதிய டைல்ஸ் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: கீழ்பெண்ணாத்தூர் தாலுகா ஆபீஸில் டைல்ஸ்கள் மாற்றம்

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூரில் திருவண்ணாமலை சென்னை பிரதான சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தில் முதல் மாடியில் செயல்பட்டு வரும் கூட்டரங்கிற்குள் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் நேற்று அதிக சத்துடன் பெயர்ந்த சம்பவம் அரசு ஊழியர்கள், பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஈடிவி பாரத்தில் இச்சம்பவம் செய்தியாக வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சப்ஜான் முன்னிலையில் திருவண்ணாமலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கௌதம் தலைமையிலான குழுவினர் இன்று (பிப்.24) ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகளவு வெப்பத்தின் காரணமாகத் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் பெயர்ந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை மூலம் சேதம் அடைந்த டைல்ஸ் கற்களைப் பெயர்த்து எடுத்துவிட்டு புதிய டைல்ஸ் கற்கள் அமைக்கும் பணியானது இன்று தொடங்கின.

இதையும் படிங்க: அரசு அலுவலகத்தில் வெடித்து சிதறிய டைல்ஸ்.. நில அதிர்வா என்ற பீதியில் ஊழியர்கள் ஓட்டம்!

Last Updated : Feb 24, 2023, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.