ETV Bharat / state

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

author img

By

Published : Nov 19, 2019, 10:09 AM IST

திருவண்னாமலை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த, போளூர் பர்னிச்சர் கடை உரிமையாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.

brain death

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எதிரில், ஸ்ரீ பர்னிச்சர் கடையை நடத்திவந்தவர் ஜெகன் (25). இவர் நேற்று முன்தினம், போளூரிலிருந்து ஆரணியில் ராட்டினமங்கலம் சாலையில் உள்ள தனது உறவினர் அனந்த சயனத்தை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். பள்ளிப்பட்டு சேவூர் புறவழிச்சாலை அருகே செல்லும்போது, எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

வேலூர் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஜெகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. பின்னர் தாயார் கோதாவரி, சகோதரி பிரியா ஆகியோரின் ஒப்புதலுடன் ஜெகனின் உடல் உறுப்புகள் தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் கண்கள், கல்லீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உடனடியாக உடல் உறுப்பு தேவையானவர்களுக்குப் பொருத்தினர்.

இதையும் படிங்க:

வேலை வாங்கித் தருவதாகக்கூறி எங்களை ஏமாற்றினர் - ஆசிரியர்கள் மீது இளைஞர்கள் புகார்!

Intro:விபத்தில் மூளைச்சாவு அடைந்த, போளூர் பர்னிச்சர் கடை உரிமையாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.
Body:விபத்தில் மூளைச்சாவு அடைந்த, போளூர் பர்னிச்சர் கடை உரிமையாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஹவுசிங் போர்டு எதிரில், ஸ்ரீ பர்னிச்சர் கடையை நடத்தி வந்தவர் பி ஜெகன், வயது 25.


இவர் நேற்று முன்தினம், போளூரில் இருந்து ஆரணியில் ராட்டினமங்கலம் ரோட்டில் உள்ள தனது மாமா அனந்த சயணத்தை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பள்ளிப்பட்டு சேவூர் பைபாஸ் சாலை அருகே செல்லும் போது, எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வேலூர் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு ஜெகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. பின்னர் தாயார் கோதாவரி, சகோதரி பிரியா ஆகியோரின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து மருத்துவக்குழுவினர் கண்கள் ,கல்லீரல் சிறுநீரகம் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உடனடியாக உடல் உறுப்பு தேவையானவர்களுக்கு பொருத்தினர்.

Conclusion:விபத்தில் மூளைச்சாவு அடைந்த, போளூர் பர்னிச்சர் கடை உரிமையாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.