ETV Bharat / state

ஒரு கோடியை தாண்டியது அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை...

author img

By

Published : Jun 30, 2022, 4:57 PM IST

ஆனி மாதம் அண்ணாமலையார் திருக்கோயில் உண்டியலில் 1 கோடியே 37 லட்சத்து 95 ஆயிரத்து 683 ரூபாய் மற்றும் 235 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

ஒரு கோடியை தாண்டியது அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை...
ஒரு கோடியை தாண்டியது அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை...

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் வந்து தரிசனம் செய்து செல்கின்றார்கள்.

இந்நிலையில் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஆனி மாதத்திற்கான பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இந்த பணி நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை தொடங்கி நண்பகல் நிறைவு பெற்றது. இதில் 1 கோடியே 37 லட்சத்து 95 ஆயிரத்து 683 ரூபாய் ரொக்கம் மற்றும் 235 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.

ஒரு கோடியை தாண்டியது அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை...

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: ஜூன் 30 - இன்றைய ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.